தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உறுதிமொழிகளை அள்ளி வீசிய பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர்! - pollachi jeyaraman

கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அதிமுக வேட்பாளர் சி மகேந்திரன்

By

Published : Mar 31, 2019, 9:31 AM IST

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பாளையம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போதுப் பேசிய அவர், அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 5 ஆண்டுகளாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது 5000 கோடி அளவிலான பொள்ளாச்சி - கோவை இடையே நான்கு வழிச்சாலை, கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், ஈச்சனாரி போன்ற பகுதிகளில் மேம்பாலம், 54 ரூபாய் இருந்த கொப்பரைத் தேங்காய் விலையை 95 ரூபாய்க்கு உயர்த்தியது, ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்தக் குழு அமைத்து ஆய்வு நடத்தியது போன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம், என்றார்.

அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details