தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு கொலை வழக்கு - விவேக் ஜெயராமனிடம் விசாரணை

By

Published : Dec 22, 2021, 10:36 PM IST

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலாவின் உறவினரான விவேக் ஜெயராமனிடம் கோயம்புத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை வழக்கு
கோடநாடு கொலை வழக்கு

கோயம்புத்தூர்:நீலகிரி கோடநாட்டில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது.

இந்த வழக்கின் விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மேற்கொண்டு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது, `கோடநாடு வழக்கை மறு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

விசாரணை வளையத்தில் விவேக் ஜெயராமன்

அதன்படி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புபடுத்தி சில தகவல்கள் வெளியாயின.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான எடப்பாடி பழனிசாமி, தன்னை இந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாகத் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கோடநாடு வழக்குத் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு பங்களாவில் தொடர்புடையவர் என்கிற அடைப்படையில் தனிப்படை காவல் துறையினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தினர்.

கோடநாடு பங்களா மேலாளரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:State Press Council அமைக்க சட்டவிதிகள் உள்ளதா? - இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details