கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு ஜனவரி வரை பணிபுரிந்த இளநிலை பொறியாளர் ஐசக் ஆர்தர், உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய சசிபிரியா ஆகியோர் கூட்டாக இணைந்து ஒப்பந்ததாரர் இளங்கோ என்பவருடன் செய்யாத வேலையை செய்ததாக மாநகராட்சிக்கு கணக்கு காட்டி உள்ளனர்.
இதில் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 157 செலவில் நடைபாதையை சீரமைத்ததாகவும், மழைநீர் வடிகாலை சுத்தம் செய்ததாகவும் போலி ரசீது தயாரித்ததாகவும், அதுபோன்று வெங்கடசாமி சாலையில் ரூ.5 லட்சத்தில் சாக்கடை கால்வாயில் சிறு சிறு பாலம் அமைத்ததாகவும் கணக்கு காட்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தம் 9,96,157 ரூபாய் செய்யாத வேலையை செய்ததாக போலி ரசீது தயாரித்து மாநகராட்சிக்கு கணக்கு காட்டி பணத்தை மோசடி செய்துள்ளனர்.