தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போக்சோ வழக்கில் கைதான நபர்: சடலமாக மீட்பு

கோயம்புத்தூர்: போக்சோ வழக்கு பதியப்பட்ட நபர் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல் துறையினர் அவரது இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்சோ வழக்கில் கைதான நபர்: சடலமாக மீட்பு
போக்சோ வழக்கில் கைதான நபர்: சடலமாக மீட்பு

By

Published : May 16, 2021, 6:44 PM IST

கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒக்கிலிப்பாளையம் பகுதியில் சுமார் 55 மதிக்கத்தக்க ஆண் சடலம், மரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியபடி இருந்துள்ளது. இது குறித்து அவ்வழியாக சென்ற மக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற செட்டிபாளையம் காவல் துறையினர் உடலை மீட்டனர்.

அங்கிருந்த சில உடைமைகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கே.கே. சாவடி பகுதியைச் சேர்ந்த மணி(52) என்பது தெரியவந்தது. அதனை அவரது மகன்கள் உறுதிபடுத்தினர். இதனைத் தொடர்ந்து உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்தவர் மீது ஏப்ரல் 30ஆம் தேதி பேரூர் காவல் நிலையத்தில் 4 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ வழக்குப் பதியப்பட்ட நிலையில், அவர் அன்றிலிருந்து தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் இன்று அவரது உடல் இந்நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போக்சோ வழக்குப் பதியப்பட்டதால், தானே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறப்பில் இருக்கும் சந்தேகம் குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details