கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட அரசு மானிய விவசாய எண்ணெய் உற்பத்தி நிலைய திறப்பு விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், 'மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு மானியம் ரூ. 5 ஆயிரத்து 500 கோடி வழங்கப்பட்டதாகவும்; தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ரூ.8000 கோடி வழங்கவுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறைக்குச் சொந்தமான இடங்களில் தடுப்பணை கட்ட அரசு தயாராக உள்ளது.
திருப்பூரைச் சுற்றியுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், வடசித்தூர் வடக்கிபாளையம் உள்ளிட்ட 15,000 ஏக்கர் மேற்குப் பகுதிகளை பரம்பிக்குளம், ஆனைமலை - நல்லாறு திட்டங்கள், ஆழியாறு பாசனத் திட்டங்களில் சேர்க்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதிகளில் ரூ. 10 கோடி மதிப்பில் ஒன்பது தடுப்பு அணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.
பரம்பிக்குளம், ஆழியாறு ஒப்பந்தம் புதுப்பிக்க விரைவில் தமிழ்நாடு, கேரளா அரசுகள் வரும் ஒன்பதாம் தேதி, குழுக்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு மாத காலத்தில் அரசு சார்பில் பொள்ளாச்சியில் கையெழுத்தாகும்.
'பரம்பிக்குளம் ஆழியாறு திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்' - துணை சபாநாயகர் ஜெயராமன்! இந்த விழாவில் முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன், கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: காவல் நிலைய பகுதியில் தீ விபத்து!