கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், '150 கோடி தடுப்பூசி போடப்பட்டதால் தான் இந்தியா கரோனா இல்லாத நாடாக உள்ளது. இதற்குக்காரணம் மாநில, மத்திய அரசின் பங்களிப்பு. இருப்பினும், இனிவரும் காலங்களில் அனைவரும் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிய வேண்டும்.
தெலங்கானாவில் ஆளுநர் புறக்கணிப்பும்; தமிழிசை பதிலும்
தெலங்கானாவில் எழுத நேரமில்லாமல் சட்டப்பேரவைத்தொடர் தொடங்கியுள்ளது. அதனை மக்களுக்காக பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆளுநர்களும் முதலமைச்சர்களும் ஒன்றிணைந்து மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
சில நேரங்களில் ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வதுகூட, தவறாக முன்னிறுத்தப்படுகிறது. மத்திய அரசு இல்லாத மாநிலங்களில் சிறு சிறு விஷயங்கள் கூட பெரிதாக முன்னிறுத்தப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் மக்களுக்காக செயலாற்றுபவர்கள் தான்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. மார்ச் 27ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் விமான சேவை தொடங்க உள்ளது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின் இந்த சேவை கிடைத்துள்ளது. அதற்கு பிரதமருக்கும் விமானத்துறை அமைச்சருக்கும் நன்றி.
தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி இதன்மூலம் புதுச்சேரியை ஒட்டியுள்ள நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும். இந்த விமான சேவை புதுச்சேரி- பெங்களூரு, பெங்களூரு - ஹைதராபாத் நகருக்கு இருக்கும். முதல் விமானப் பயணத்தில் நான் பயணம் மேற்கொள்ள உள்ளேன்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: IND vs SL: மிரட்டும் இந்திய பவுலர்கள்; கதறும் இலங்கை