தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு பேருந்தில் ஓசியில் போக மாட்டேன் பாட்டியின் வைரல் வீடியோ - minister insult ladies for free bus

கோவை அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் ஓசி டிக்கெட்டில் பயணம் செய்ய மாட்டேன் என நடத்துநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharatஅரசு பேருந்தில் ஓசியில் போக மாட்டேன் பாட்டியின் வைரல் வீடியோ
Etv Bharatஅரசு பேருந்தில் ஓசியில் போக மாட்டேன் பாட்டியின் வைரல் வீடியோ

By

Published : Sep 29, 2022, 4:26 PM IST

கோயம்புத்தூர்:இன்று(செப்-29) காலை கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கட் கொடு என்று ஆவேசமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இலவசம்னு சொல்லிவிட்டு பொதுமக்களை ஓசி டிக்கட் என்று அவமானப்படுத்துவதா என்று கொந்தளித்தது பேருந்து பயணித்த மற்ற பயணிகளின் கவனத்தையும் திசை திருப்பியது. நீண்ட நேரம் நடத்துநரிடம் விவாதத்தில் ஈடுபட்ட அந்த மூதாட்டி ஒருவிதமாக சமாதானம் அடைந்தார்.

இந்த சம்பவத்தை அதே பேருந்தில் பயனம் செய்த யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ கோவையில் வைரலாகி வருகிறது.

அரசு பேருந்தில் ஓசியில் போக மாட்டேன் பாட்டியின் வைரல் வீடியோ

இதையும் படிங்க:ஏம்மா நீ எஸ்சி தானே? விவாதத்திற்குள்ளாகும் உயர்கல்வித்துறை அமைச்சரின் பேச்சு..

ABOUT THE AUTHOR

...view details