கோவையில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை எடுத்துவந்த வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் உயிரிழந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்தாக உள்ளது. மேலும், தனியார் மருத்துமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களையும் சேர்த்து, கோவை மாவட்டத்தில் இதுவரை ஒன்பது பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனாவால் முதியவர் உயிரிழப்பு
கோயம்புத்தூர்: ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை எடுத்துவந்த 65 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
corona
இதனிடையே, கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்றுவந்த 25 வயது கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரு தினங்கள் கழித்து குழந்தைக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தப்பியோடிய கரோனா நோயாளி மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு..!