தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காயங்களுடன் உயிரிழந்த யானையின் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்கள் இல்லை! - elephant died in coimbatore

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் பகுதியில் உடலில் காயங்களுடன் உயிரிழந்த யானையின் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்கள் ஏதும் இல்லை என வனத் துறை மருத்துவர் குமார் தெரிவித்தார்.

வனத்துறை மருத்துவர் குமார்
வனத்துறை மருத்துவர் குமார்

By

Published : Sep 18, 2020, 8:02 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை காலில் காயங்களுடன் சுற்றிவந்தது. அதனையறிந்த வனத் துறையினர் சாடிவயல் யானைகள் முகாமிலிருந்து வெங்கடேஷ், சுயம்பு ஆகிய இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து அந்த யானைப் பிடித்து சிகிச்சை அளிக்க முற்பட்டனர்.

ஆனால் யானை சிக்காமல் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றது. அதையடுத்து யானை வனப்பகுதிக்குள் உயிரிழந்தது தெரியவந்தது. உடனே மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வன பாதுகாவலர் தினேஷ் இருவரும் கால்நடை மருத்துவர் சுகுமாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு யானையின் உடல் உடற்கூறாய்விற்கு உட்படுத்தப்பட்டது.

வனத்துறை மருத்துவர் குமார்

உடற்கூறாய்வு முடிவில் யானையின் உடம்பில் 15-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வன அலுவலர் வெங்கடேஷ், "உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த ஆண் யானை மற்ற யானைகளுடன் ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்து உள்ளது. அதன்காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யானை துப்பாக்கியால் தாக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அதற்கான தடயங்கள் ஏதும் உடற்கூறாய்வில் இல்லை" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து பேசிய வனத் துறை மருத்துவர் குமார், "யானையின் உடலின் மேல் பகுதியில் மட்டுமே லேசான காயங்கள் இருந்துள்ளன. காலில் முறிவு ஏற்பட்டதால் நடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளது. உடலின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்தது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காயம்பட்ட யானைக்கு சிகிச்சை : உதவிக்காக அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள்!

ABOUT THE AUTHOR

...view details