அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவை கற்பகம் கல்லூரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, நம் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை அளித்துள்ளார். பெண்களுக்கான திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள் போன்ற பலவற்றை செயல்படுத்தியுள்ளார். காவிரி பிரச்சனையில் திமுக காங்கிரஸ் செய்யாததை ஜெயலலிதா மூன்றே ஆண்டுகளில் அரசாணை பெற்று தந்தார்.
உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான்! - ஓபிஎஸ் - ஜல்லிக்கட்டு
கோவை: உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் நானல்ல, பிரதமர் மோடி தான் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார்.
ops
மத்திய காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்தபோதுதான், நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதனை நீக்க அதிமுக அரசு கோரிக்கை வைத்த அன்றே, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியவர் பிரதமர் மோடி. எனவே, நீங்கள் கூறுவதுபோல் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் நானல்ல, பிரதமர் மோடி தான்” என்றார்.
இதையும் படிங்க:'ஈழத்தமிழர்களுக்கு மத்திய அரசு பச்சைத் துரோகம்!'