தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 14, 2021, 5:08 PM IST

ETV Bharat / city

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ”தனலாபம்” - வானதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கோயம்புத்தூர்: புத்தம் புதிய பொலிவுடன் திறக்கப்பட்ட கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் 'தனலாபம்' என்று எழுதப்பபட்டுள்ளது தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ”தனலாபம்” - வானதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ”தனலாபம்” - வானதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதிய வண்ணம் அடிக்கப்பட்டு பூஜைகள் செய்து திறக்கப்பட்டது. இதனை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு குத்து விளக்கேற்றி, தாய் தந்தை மூத்த உறுப்பினர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வானதி சீனிவாசன் சட்டபேரவை உறுப்பினர் இருக்கையில் அமர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பயிற்சி அளிக்கப்படும் , பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என விஷ்வ ஹிந்து பரிஷத் நீண்ட காலமாக சொல்லி வருகிறது. தமிழில் அர்ச்சனை தற்போது நடைபெற்று வருகிறது. மேல்மருவத்தூர், மற்றும் சமுதாய கோயில்களில் பெண்கள் பூஜை செய்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு அரசு புதிதாக எதையும் செய்யவில்லை.

கோயில்களில் ஆகம விதிப்படி தான் பூஜை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற அறிவுறுத்தியுள்ளது. இதில் பக்தர்களின் உணர்வு, கோயில் நிர்வாகத்தின் ஆலோசானையை கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நடக்க வேண்டும்.

வானதி சீனிவாசனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

திமுக இந்துக்களுக்கும், இந்து கடவுள்களுக்கும் எதிரானவர்கள் என நான் சொல்லவில்லை. அதன் தலைவர்களே சொல்லி இருக்கின்றனர். இந்து சமய அற நிலையத்துறையில் தற்போது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தன்னிச்சையானதா, உண்மையானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள்து.

தமிழ்நாடு அரசு உண்மையாகவே இந்து கோயில்களின் மீது அக்கறை இருந்தால் , கோயில் சொத்துக்கள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடமிருந்து மீட்க வேண்டும். கோயில் சொத்துக்களை பாதுக்காக்க ஆதீனங்களின் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதனிடையே கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் காவி நிறமாக மாறியதற்கும், அங்கு நடைபெற்ற பூஜையில் சுவரில் 'தனலாபம்' என்று எழுதி இருப்பதற்கும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க:பெண் காவல் துறையினருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details