கோயம்புத்தூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ளார். இங்கு முக்கிய சாலைகள் அனைத்தும் விரிவுபடுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறன.
பீளமேடு பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்றவகையில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 2.42 ஏக்கர் பரப்பளவில், 114.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் மூலம் 20,000 பேர் நேரடியாகவும், 40,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து பேசிய அவர், திமுக கட்சியின் தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக உள்ள கனிமொழிக்கு, கோவை குறித்து எதுவும் தெரியாது. பரப்புரையின் போது திமுகவினர் எழுதிக் கொடுத்ததை அவர் பேசி வருவதாக விமர்சித்த அவர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ளது போல், கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறன என்று கூறினார்.
கோவையில் நீண்டகால திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதை எதுவும் தெரியாத மக்களவை உறுப்பினர் கனிமொழியும், திமுகவினரும் ஐ பேக் நிறுவனம் செல்வதை கேட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.