கோயம்புத்தூர்:பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு அணை கட்ட உறுதுணையாக இருந்த மூவருக்கும் சிலை, அரங்கம் அமைப்பது குறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கொங்கு மண்டலத்தில் அமைந்திருக்கக் கூடிய பாசனத் திட்டங்களில் பெரிய திட்டம் என்கிற பரம்பிக்குளம் ஆழியாறு அணைத்திட்டம் உருவாவதற்கு காரணமாக இருந்த திருவாளர் வி.கே. பழனிச்சாமி கவுண்டர், மகாலிங்கம் கவுண்டர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி. சுப்பிரமணியம் ஆகியோருக்கு பொள்ளாச்சியில் இருக்கக்கூடிய நீர்ப்பாசன துறைக்குச் சொந்தமான இடத்தில் மூன்று பேருக்கும் முழு உருவச் சிலை அமைக்கப்படவுள்ளது. மேலும் அரங்கம் அமைத்து கீழ் தளத்துக்கு பழனி கவுண்டர் , மேல் தளத்துக்கு மகாலிங்க கவுண்டர் பெயரும் வைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு - கேரள நீர்ப்பாசனம்
இதற்கான மானிய கோரிக்கையும் விளக்கம் அளிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.