பொள்ளாச்சி அருகே உள்ள ரெட்டியார்மடம் பகுதியில் செயல்பட்டுவரும் தென்னை நார் தொழிற்சாலையிலிருந்து தரம்வாய்ந்த தென்னை நார் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொச்சின் செல்வதற்காக பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வந்துகொண்டிருந்தது.
லாரியில் பற்றி எரிந்த தீ: பல லட்சம் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசம்! - பொள்ளாட்சி
கோவை: பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் தென்னை நார் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால், பல லட்சம் மதிப்புள்ள தென்னைநார் மற்றும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாகின.
அப்போது ஆவல் சின்னம்பாளையம் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக தென்னை நாரில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைக்கண்ட சாலையோரமிருந்த பொதுமக்கள் லாரியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து லாரி ஓட்டுநர் ஓரமாக நிறுத்தியுள்ளார். இந்நிலையில் தீ மளமளவென பற்றி எரிந்ததால், லாரியும் அதிலிருந்த தென்ன நாரும் எரிந்து நாசமாகின.
இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர், முதற்கட்ட விசாரணையில், தென்னை நாரை உயரமாக லாரியில் ஏற்றிக்கொண்டு வந்த காரணத்தினால் மின்சார கம்பி உரசி தீ பிடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.