கோயம்புத்தூர்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் நேற்று முன் தினம் (ஆக.10) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.
கோவையில் வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில் குமார், பொறியாளர் சந்திரபிரகாஷ், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் லட்சுமணன் இல்லம் உள்ளிட்ட 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.
இதில் கணக்கில் வராத பணம், ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்ந நிலையில் லஞ்ச ஒழிப்பு சோதனைக்குள்ளான சந்திரபிரகாஷின் கேசிபி நிறுவனம், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் லட்சுமணன் இல்லத்தை பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்து கொடுத்துள்ளதற்கான ஆவணங்கள் வெளியாகியுள்ளன.
பொதுப்பணித்துறை மட்டுமே செய்யக்கூடிய இந்தப் பணிகளை கேசிபி நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தி செய்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.