கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ”மக்கள் நினைத்தால் எங்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய முடியும். கமல் ஹாசன் வெளியூர்க்காரர் என்று பரப்புரை செய்வதை நான் வேடிக்கையாக பார்க்கிறேன். தேர்தலை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதுதான் ஜனநாயகம். எங்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது தொழில் அல்ல.
கமல் ஹாசன் வெளியூர்க்காரரா? - மநீம
கோவை: கமல் ஹாசன் வெளியூர்க்காரர் என்று பரப்புரை செய்வதை வேடிக்கையாகவே பார்ப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மநீம நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்வதில் உள்நோக்கம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. செய்தி நிறுவனங்கள் பல்வேறு கருத்துக் கணிப்புகளை நடத்துகின்றனர். அது தவறாகக் கூட இருக்கலாம். கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றார்கள். ஆனால் அது பொய்யானது. எங்களது கூட்டணியின் வெற்றி என்பது உறுதி” என்று தெரிவித்தார். உடன் மநீம துணைத் தலைவரும் அக்கட்சியின் சிங்காநல்லூர் வேட்பாளருமான மகேந்திரன் உடனிருந்தார்.
இதையும் படிங்க: அமமுக கட்சி வேட்பாளருக்கு நிபந்னையுடன் கூடிய முன்பிணை!