தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி' இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - India Medical association

கோவை: வடவள்ளி பகுதியில் தேசிய மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினர் (IMA) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி' இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
'மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி' இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 18, 2021, 6:40 PM IST

கோவை வடவள்ளி பகுதியில், மருத்துவர்களைப் பாதுகாக்க தேசிய அளவிலான பாதுகாப்பு சட்டத்தை இயற்ற கோரி, இந்திய மருத்துவ சங்கத்தினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) தலைவர் ரவிக்குமார், செயலாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை காக்க வலியிறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில செயலாளர் ரவிக்குமார், “இந்தியாவில் சமீப காலமாக மருத்துவர்களை நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர். வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டாக்டர்கள் பலத்த காயம் அடைந்தும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

மருத்துவப் பணிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கும் இந்த நிலையை மாற்ற வேண்டும். தேசிய அளவிலான மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நோய்த்தொற்று காலத்தில் உயிரை பொருள்படுத்தாமல் பணியாற்றும் மருத்துவர்களை கடுமையாக தாக்கி வருகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்களை தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசு கவனத்தில்கொண்டு, மருத்துவர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நோயாளிகளின் உறவினர்கள் அத்துமீறிய செயல்களை தடுக்க மத்திய அரசு தேசிய அளவிலான மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details