கோயம்புத்தூர்:சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பயிற்சிக்காக வந்த தன்னை, சக விமானப்படை அலுவலர் அமிதேஷ் ஹார்முக் (விமானப்படை லெப்டினென்ட்) பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி, பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லெப்டினென்ட் அமிதேஷை விமானப்படை காவலில் ஒப்படைக்க உத்தரவிட்டதையடுத்து, அவர் விமானப்படை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குற்றம் நிருபிக்கப்பட்டால் தண்டனை
இதுகுறித்து அமிதேஷ் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சுந்தரவடிவேலு பேசுகையில், "பெண் அலுவலர் பாலியல் வழக்கை காவல்துறை விசாரித்து வந்த நிலையில், விமானப்படை அலுவலர்களுக்கு விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்திய விமானப்படை சட்டம் 1950இன்படி, இந்த வழக்கு விசாரணை இந்திய விமானப்படை அலுவலர்கள் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை தரப்பு வழக்கறிஞர் சுந்தரவடிவேலு பேட்டி இந்திய விமானப்படை அலுவலர்கள் விசாரணையில் குற்றம் நிரூபிக்கபட்டால் தண்டனை வழங்கப்படும். பெண் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கலாம். ஆனால், கைது செய்து சிறையில் அடைத்திருக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண் ஐஏஎஃப் அலுவலர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் விமானப்படையிடும் ஒப்படைப்பு