தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2021, 8:38 PM IST

ETV Bharat / city

அரசிற்கு முதுகெலும்பு உள்ளதா? - எச். ராஜா விமர்சனம்

கிறிஸ்துமஸ் விழாவன்று வெளிநபர்கள் தேவாலயத்திற்கு வரக்கூடாது என்று தெரிவிக்க இந்த அரசிற்கு முதுகெலும்பு உள்ளதா என எச். ராஜா கேட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் விழாவன்று
கிறிஸ்துமஸ் விழாவன்று

கோயம்புத்தூர்: பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச். ராஜா கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, 'திமுக கடந்த ஏழு மாதங்களாக அனைத்துத் துறைகளிலும் தோற்று விட்டது. திமுகவிற்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என்ற எண்ணும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

மழைப்பாதிப்புகளை சமாளிக்க முடியாமல் திமுக அரசு தோற்றுவிட்டது. மக்களை திசை திருப்பும் நோக்கில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரசின் உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர்களைக் கைது செய்து வருகிறார்கள். திமுக ஆட்சியில் 150 இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. பட்டா நிலத்தில் இருக்கக்கூடிய கோயில்களும் எடுக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் போன்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது. மாரிதாஸ் செய்வதில் என்ன தவறு இருக்கிறது. தமிழ்நாட்டில் மாற்றுக் கருத்தை மிதிக்கின்ற ஆட்சி நடைபெற்று வருகிறது.

பிபின் ராவத் பற்றியும்; மோடி பற்றியும் ஆர்எஸ்எஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பேசியவர்களின் ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அத்தகைய தேச விரோதிகளைக் கைது செய்ய வேண்டும்.

மேலும் காவல் துறையை ஏவல் துறை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சரியாகத்தான் கூறியிருக்கிறார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவிட தலைமைச்செயலாளர் கேட்டிருப்பது வரவேற்புக்குரியது. குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து குறித்து கறுப்புப் பெட்டி ஆய்வுக்குப் பிறகு தெரிய வரும். அதற்கு முன்பு சர்ச்சை எழுப்பக்கூடாது.

இதனையடுத்து பாஜகவினர் பொதுக்கூட்டங்களை கூட்டினால் வைரஸ் தொற்று பரப்புவதாக வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. முதலமைச்சர் நிகழ்ச்சிகளுக்கு கூடும் கூட்டத்தினால் வைரஸ் தொற்று பரவாதா. தமிழ்நாடு நிதியமைச்சர் வேலைபார்த்த இடங்கள் முன்னேறியதில்லை எனப் பலரும் கூறுகிறார்கள். ஒன்றிய அரசின் திட்டங்கள் மட்டுமே மாநிலத்தில் நடைபெறுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் விழாவன்று வெளிநபர்கள் தேவாலயத்திற்கு வரக்கூடாது என்று தெரிவிக்க இந்த அரசிற்கு முதுகெலும்பு உள்ளதா? ' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயரிடப்பட்டதால் சர்ச்சை!

ABOUT THE AUTHOR

...view details