கோவை: மாங்கரை பகுதியில் ஜூலை 13ஆம் தேதி பெண் யானை ஒன்று ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. அந்த யானையை அரசு வழிகாட்டுதலின்படி மற்ற வன விலங்குகளுக்கு நோய் பரவாத வகையில் வன பணியாளர்கள் யானையின் உடலை பாதுகாப்பாக எரித்தனர்.
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழ்களும் இந்தப் பணியில் சிறப்பாக ஈடுபட்ட வன பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அதிவிரைவு மீட்பு படையை சார்ந்த ஆறு பேருக்கு கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நேற்று (ஜூலை 24) நினைவு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழ்களும் வன பணியாளர்களுக்கு பரிசு
இந்நிகழ்வில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய வன பணியாளர்களுக்கு நினைவு பரிசையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழ்களும் இதில் கோவை மாவட்ட வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் முருகானந்தம், நிர்வாகிகள் சண்முகம், சுதாகர், கார்த்தி, வெள்ளியங்கிரி, மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'ரூ. 2.19 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு'