தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எஸ்.பி. வேலுமணி பரப்புரை மேற்கொண்டுவருகிறார். இன்று (பிப்ரவரி 11) கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின்போது மக்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கவுண்டம்பாளையம் துடியலூர் பகுதியில் செய்து மேம்பாலத் திட்டம், குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கூறி வாக்குச் சேகரித்தார்.
மேலும், "தற்பொழுது உள்ள திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. திமுக வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் என ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நம்பி மாணவ மாணவிகள் உயிரிழந்ததுள்ளனர்.