ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அருகே உள்ள ஆழியார் வனப்பகுதியை ஒட்டியுள்ள உருலகுழிப்பள்ளம் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் 46 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
ஆழியார் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு! - Anaimalai Tiger Reserve
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அருகே உள்ள ஆழியார் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆழியார் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு
இது குறித்து ரோந்து சென்ற வனத்துறையினர் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உயரலுவலர்கள், இறந்த பெண் யானையின் உடலைமீட்டு, உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆய்வில் ஆண் காட்டு யானை, பெண் யானையை தந்தத்தால் குத்தி கொன்று இருக்கலாம் என்றும், மேலும் வயது முதிர்வு காரணமாகவும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.