தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுகவின் மொழிப்பற்று, இனப்பற்று, தியாகம் அளப்பரியது - செல்வகணபதி - மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டம்

இன்றைக்கு ஆளுகின்ற அதிமுகவைவிட திமுக அதிகமாக வாக்குகளைப் பெற்றிருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் மொழி, இனப்பற்று, நாம் செய்த தியாகம் என பொள்ளாச்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி பேசியுள்ளார்.

pollachi dmk meeting, pollachi ex minister selva ganapathy speech, dmk republic day function in pollachi, பொள்ளாச்சி திமுக கூட்டம், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டம், பொள்ளாச்சி ஜீவா திடலில் திமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி
திமுக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டம்

By

Published : Jan 26, 2020, 6:16 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஜீவா திடலில் திமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டம் இன்று நடந்தது.

பொள்ளாச்சி ஜீவா திடலில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டமும், ஊராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கான பாராட்டு விழாக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... ‘வா குவாட்டர் கட்டிங்’ என்றழைத்த நிறுவனம்!

முன்னாள் அமைச்சரும், திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான செல்வகணபதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரது உரையில், “இப்போது 46 விழுக்காடு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளோம். ஆனால் நம்மை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் (விக்கிரவாண்டி, நாங்குநேரி) தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றிவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறினர்.

திமுக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டம்

ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 500இல் 292 பேர் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். 5,124 ஒன்றிய உறுப்பினர்களில் 2800 திமுகவினர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஆளும்கட்சியைவிட உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதற்குக் காரணம் மொழி, இனப்பற்று, நாம் செய்த தியாகம்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details