தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் முடிந்தாலும், அடுத்தது திமுக ஆட்சிதான் என்று ஸ்டாலின் கூறிக்கொண்டே இருப்பார்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோவை: சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்பும், அடுத்தது திமுக ஆட்சிதான் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிக்கொண்டே இருப்பார் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

By

Published : Sep 20, 2020, 5:12 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, திப்பம்பட்டி கிராம பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு, மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு மற்றும் தார்சாலை மேம்படுத்தும் பணிக்காக மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இதுவரை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு 12 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். அதில் 10 ஆயிரத்து 500 பேர் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கும் இரண்டாயிரம் பேர் கோழியின ஆராய்ச்சி மையத்தில் சேர்வதற்காகவும் விண்ணப்பித்துள்ளனர். கூடிய விரைவில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கால்நடைகளுக்கு நோய் தொற்று வருவதற்கு முன்பே கண்டறிந்து சரி செய்வதற்கு மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்" என்றார்.

ஆறு மாதங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்ததற்கு பதிலளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். தேர்தல் முடிந்தும் ஸ்டாலின் இவ்வாறே கூறிக் கொண்டிருப்பார் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details