தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் திருவிழா 2021! - மோதிரங்கள் தயாரிப்பு தீவிரம்!

கோவை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சின்னங்கள் பதித்த மோதிரங்கள் தயாரிப்பும், விற்பனையும் கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு.

rings
rings

By

Published : Jan 16, 2021, 1:17 PM IST

Updated : Jan 19, 2021, 8:50 PM IST

காலங்காலமாக அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் தாங்கள் சார்ந்த கட்சியின் அடையாளத்தை தங்களோடு சேர்த்து வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். அப்படி வந்ததுதான், கறை வேட்டி, வண்ணத்துண்டு, பாக்கெட்டில் உள்ள தலைவர்கள் படம் தெரியும் அளவிலான சட்டைகள், டாலர்கள் ஆகியன. அந்த வரிசையில் தங்களின் ஆதர்ச தலைவர்கள் உருவம் பொறித்த பெரிய மோதிரம் போடுவதும் மிகப்பிரபலமானது. தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் அதற்கான தேவையும் அதிகப்படியாகவே இருக்கிறது.

அந்தவகையில், பரப்புரையின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, தலைவர்களின் உருவம், கட்சி சின்னம் பதித்த மோதிரங்களை தயாரிக்கும் நிறுவனங்களை நாடிச்சென்று பளபளக்கும் மோதிரங்களை ஆர்டர் செய்து வருகின்றனர் தேர்தல் கள சிப்பாய்கள். இதன் காரணமாக கோவையில் தலைவர்கள், சின்னங்கள் ஜொலிக்கும் மோதிரங்கள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈச்சனாரி, டவுன்ஹால் பகுதியில் உள்ள சர்வம் மெட்டல் நிறுவனம், தலைவர்களின் படம் பொறித்த ஐம்பொன் மோதிரங்களை இரவு, பகலாக தயாரித்து வருகிறது. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சோனியா, ராகுல், மோடி உள்ளிட்டோரின் படங்கள் பதித்த ஐம்பொன் மோதிரங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்த வரிசையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்களும் புதுவரவாக சேர்ந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தலைவர்கள் உருவம் பொறித்த மோதிரங்கள்

வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையில் பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் செய்யப்படும் மோதிரங்களை தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை விரும்பி அணிவதாகவும், முன் எப்போதும் போல் இல்லாத வகையில் மோதிரங்கள் அதிகளவில் விற்பனையாவதாகவும் கூறுகிறார் சர்வம் மெட்டல் நிறுவன உரிமையாளர் பத்ரி நாராயணன். கரோனா காரணமாக ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், ஆர்டர்கள் குவிந்துள்ள நிலையில் கூடுதலாக வேலை செய்து வருவதாகவும், தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தங்களுக்கு, தேர்தல் நேர வேலையால் சிரமக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

தலைவர்கள் உருவம் பொறித்த மோதிரங்கள்

வேட்பாளர் அறிவிப்பு, வேட்பு மனுதாக்கல், பரப்புரை, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என சுமார் நான்கு மாதத் திருவிழாவில் மிடுக்கோடு காட்சியளிக்க தங்களை தயார்படுத்தியுள்ள அரசியல் கட்சியினருக்கு மேலும் மிடுக்கு சேர்க்க இதோ மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்கு எந்த கட்சியினரின் மோதிரங்கள் ஈர்க்கப்போகிறது என்பதை வாக்கு எண்ணிக்கை நாள் கூறிவிடும்.

தேர்தல் திருவிழா 2021! - மோதிரங்கள் தயாரிப்பு தீவிரம்!

இதையும் படிங்க: பரபரக்கும் பரப்புரை வாகனத்தில் உள்ள சிறப்பம்சம் என்ன?

Last Updated : Jan 19, 2021, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details