கோயம்புத்தூர்:குனியமுத்தூரில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் காலை 6 மணிமுதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், இவருக்குத் தொடர்புடைய 52-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை - SP வேலுமணி
07:32 August 10
குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது சாலை அமைத்தல், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் முறைகேடு செய்ததாகவும், அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் ஒதுக்கியதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெறுகிறது.
ஏற்கெனவே எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த நிலையில், தற்போது எஸ்.பி. வேலுமணி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. தேர்தல் பரப்புரையின்போது, திமுக ஆட்சி அமைந்ததும் எஸ்.பி. வேலுமணி சிறைக்குச் செல்வார் என ஸ்டாலின் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க:அரசு டெண்டர் தருவதாக ரூ. 1.25 கோடி மோசடி- எஸ்.பி. வேலுமணி மீது புகார்