தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரஜினியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - 'பளீர்' பேட்டிகொடுத்த வைகோ! - governor

”ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை; அவரை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம்”, என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ரஜினியை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்-  வைகோ
ரஜினியை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்- வைகோ

By

Published : Aug 9, 2022, 4:55 PM IST

கோயம்புத்தூர்காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வைகோ 'பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது குறித்த கேள்விக்கு, ”ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை. அவரை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம்” எனத்தெரிவித்தார்.

மேலும், ”மதிமுக புத்துணர்ச்சிப்பெற்று மீண்டும் தமிழ்நாட்டின் அரசியல் திசையைத் தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது.இந்த கொங்கு மண்டலத்தில் தற்பொழுது ஒரு லட்சம் மதிமுக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இன்னமும் வருவார்கள். அதற்கு அடையாளமாக தான், கோவிட் காலத்தில் நான் சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்தபோதிலும் தற்பொழுது தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தை கொங்கு மண்டலத்தில் தொடங்குகிறேன். இதுதான் மதிமுகவின் ஜிப்ரான்டல் கோட்டை.

தமிழ்நாடு முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவினை சென்னையில் மிகச்சிறப்பாக நடத்த உள்ளோம். பொருளாதாரம் பலம் இல்லை என்றாலும் லட்சிய தாகம் உள்ளது. மதிமுக, திமுகவோடு லட்சிய ரீதியாக உடன்பாடு கொண்டு சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கும் ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்துவதர்க்கும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம் என்று சொல்லக்கூடிய ஏகாதிபத்திய பாசிச கட்சிகளை நிறுத்துவதற்கும் அண்ணாவின் வழியில் கலைஞர் எவ்வாறு கொள்கைகளை பாதுகாத்து வந்தாரோ, அது போலவே 'திராவிட மாடல் ஆட்சி' என்று சொல்லி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை மேற்கொள்கிறார்கள், இங்கு உள்ள திட்டங்கள் போல் எங்கும் அறிமுகப்படுத்தப்படவோ செயல்படுத்தப்படவோ இல்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான ஆட்சிக்கொள்கை ரீதியிலான ஆட்சி, திராவிட இயக்கம் லட்சிய ரீதியிலான கட்சி என்ற முறையில் அவர்கள் செயல்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது.

ஜிஎஸ்டி-யால் மிகப்பெரிய பாதிப்புக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். ஜிஎஸ்டியினால் பொதுமக்கள் மிதிக்கப்படுகிறார்கள். தவிர அதானியோ, அம்பானியோ அல்ல. பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வினால் அனைத்துப்பொருட்களும் உயர்கிறது. மோடி அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது” என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறியது குறித்து கருத்து தெரிவித்த அவர், ”அது சரிதான், அவர் நடுநிலையோடு அதனைக் கூறியுள்ளார். அதனை ஆளுகின்ற கட்சி பின்பற்றினால் நல்லது’’ எனத் தெரிவித்தார். ''சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் அனைவரது இல்லங்களிலும் கொடியேற்றுவது நல்ல திட்டம் தான்; அது வரவேற்கத்தக்கது”, எனக் கூறினார்.

இதையும் படிங்க:இல்லம் தோறும் மூவர்ண கொடியை ஏற்றுங்கள்: பொதுமக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details