கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி ஏவிஎம் நகரிலுள்ள ஒரு வீட்டின் இரும்பு கதவில் நாய் ஒன்று சிக்கியுள்ளது. இது குறித்து தகவலறிந்த கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், இரும்புக் கதவில் சிக்கிய 8 வயதுடைய நாயை தீயணைப்புத் துறையினர், வெல்டிங் மெசின் மூலம் கம்பியை அகற்ற முயன்றனர். ஆனால், அதில் சிரமம் இருந்ததால் விளக்கெண்ணையை பயன்படுத்தி கம்பியை அகற்றி நாயை மீட்டனர்.
இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், “நேற்று (அக்.25) மாலை பெரிய இரும்பு கதவிலுள்ள வளையத்தில் நாய் சிக்கியுள்ளது. அதனை அவ்வழியாக சென்ற ஏராளமானோர் அதனை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இன்று (அக்.26) காலை அவ்வழியாக சென்ற ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் நாங்கள் வந்து நாயை மீட்டுள்ளோம்” என்றார்.
இரும்பு கதவில் சிக்கிய நாய் சுமார் 12 மணி நேரமாக கதவில் சிக்கித் தவித்து வந்த நாய், மீட்கப்பட்டப் பிறகு சோர்வுடன் இருந்ததால், அதற்குத் தேவையான உணவுகளை அளித்த பின்னர் அங்கிருந்து அந்த நாய் சென்றதாக தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:பட்டாசு கடையில் பெரும் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு