தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘அதிமுகவினர் மீது தீர்ப்புகள் வந்தாலே அவர்களது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்’ - karthi sivasenathipathi news

கோவை: அதிமுகவினர் மீது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்புகள் வந்தாலே அவர்களது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் எனத் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி

By

Published : Mar 18, 2021, 4:31 PM IST

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாபதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசனிடம் வேட்புமனு தாக்கல்செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “தொண்டாமுத்தூர் தொகுதியில் அராஜகம் செய்யக்கூடிய, குண்டாஸ் செய்யக்கூடிய இருக்கும் ஒரே ஆள் அமைச்சர் வேலுமணிதான். எங்களிடம் எந்த குண்டாஸ்களும் கிடையாது. அவரிடம் இருக்கும் பணமும் கிடையாது. எங்களிடம் மானமும், மரியாதையும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் மட்டுமே இருக்கின்றன.

ஆள் பலமோ, காவல் துறையின் பலமோ, பண பலமோ எனக்குக் கிடையாது. தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அமைச்சர் வேலுமணியின் சட்டவிரோத நடவடிக்கை குறித்து மக்கள் தெரிவித்துவருகின்றனர். புகார் தெரிவிக்கும் மக்கள் தங்களை அடையாளப்படுத்தவே அச்சப்படுகின்றனர். தொண்டாமுத்தூர் தொகுதியில் மக்களிடம் நல்ல எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது.

‘அதிமுகவினர் மீது தீர்ப்புகள் வந்தாலே அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்’ - கார்த்திகேய சிவசேனாபதி

ஊடகங்கள் முன்னிலையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் விவாதம் நடத்த தயார். அதற்கு அவர் பதில் சொல்ல மாட்டேன் என்கின்றார். 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாதபோது திமுக மீது குற்றம் சொல்வது சரியல்ல.

அதிமுகவினர் மீது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்புகள் வந்தாலே அவர்களது அரசியல் வாழ்க்கை முடித்துவிடும். 2016இல் நான்கு கோடி இருந்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சொத்து 2021இல் மூன்று கோடியாகக் குறைந்துவிட்டது என்கின்றார்” என்றார்.

இதையும் படிங்க...ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு

ABOUT THE AUTHOR

...view details