தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி! - மு.க.ஸ்டாலின் உறுதி! - திமுக ஆட்சி

கோவை: திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin

By

Published : Feb 20, 2021, 7:22 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகள், குறைகள் அடங்கிய மனுக்களை பெற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிபட்டியில் இன்று, மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், பின்னர் அவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர், ”பொள்ளாச்சி பாலியல் குற்றம் அதிமுகவினரால் நிகழ்த்தப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கில் சாட்சிகளை அச்சுறுத்தி குற்றவாளிகளை அதிமுக அரசு காப்பாற்ற முயல்கிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் இதில் சம்மந்தபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை பெற்றுத்தரப்படும்.

’பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை அதிமுக அரசு காக்கிறது’

அதேபோல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் சீரமைக்கப்பட்டு, குழுவைச் சேர்ந்த பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்” எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details