நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் வேலையில்லாத திண்டாட்டமும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் தங்களது வேலைகளை இழந்து மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே அவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனக் கோரி, கோவை மாவட்டம் சீலக்கம்பட்டி ஊராட்சி மன்றத்தின் அலுவலகம் முன்பும், உடுமலை வட்டாச்சியர் அலுவலகம் முன்பும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அப்போது, மாற்றுத்திறனாளிகளை 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியமர்த்தி பணி வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க:ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்!