தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் காவலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஐஜி - டிஐஜி

கோயம்புத்தூரில் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் இருவரைப் பாராட்டிய காவல் துறை டிஐஜி, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஐஜி
பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஐஜி

By

Published : Aug 24, 2021, 10:56 PM IST

கோயம்புத்தூர்:பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்து பெண்கள் உதவி மையம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பெண் காவலர்களுக்கு பாராட்டு

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் கலைச்செல்வி, செல்வி சத்யா ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து அதிகப்படியான விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர்.

பெண் காவலருக்குப் பாராட்டு
பெண் காவலருக்குப் பாராட்டு

இதனையறிந்த கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறை டிஐஜி முத்துசாமி, இரு பெண் காவலரையும் நேரில் அழைத்து அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அப்போது, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உடன் இருந்தார்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் இளைஞருக்கு விருது வழங்கி பாராட்டிய காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details