சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் கடந்த இரண்டு நாள்களாகப் பரப்புரையில் இறங்கியுள்ளார். இதில் இன்று (மார்ச் 19) கோவை புலியகுளம் பகுதியில் நடன ஆசிரியர் கலா மாஸ்டருடன், வானதி சீனிவாசன் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய வானதி சீனிவாசன், “நடிகர், நடிகைகள் எல்லாம் கோவைக்கு படப்பிடிப்புக்காகத்தான் அதிகமாக வருவார்கள். அதுவும் நகரத்திற்கு வெளியில்தான் படப்பிடிப்பு நடைபெறும். ஆனால் கமல் ஹாசன் தற்போது நகரத்திற்குள் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்” என்று விமர்சித்தார்.
மேலும், கூப்பிட்ட குரலுக்கு உடனே வரும் சட்டப்பேரவை உறுப்பினர் வேண்டுமா அல்லது ஸ்டுடியோ முன்பு நிற்கணுமா? என்று கேள்வி எழுப்பினார்.
நீங்கள் வானதிக்கு ஒட்டு போட்டால் சும்மா கிழி..கிழி..கிழி..! -கலா மாஸ்டர்! அவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்ட கலா மாஸ்டர் உங்கள் வாக்குகளை உங்கள் ஊரில் இருக்கும் உங்கள் வீட்டுப் பெண்ணிற்குத்தான் போட வேண்டும் என்றும், நீங்கள் வாக்களித்தால் நான் என்ன சொல்லுவேன், ‘சும்மா கிழி கிழி கிழி" என்று சொல்லுவேன்’ என அவருடைய பிரபல வசனத்தைக் கூறினார்.
இதையும் படிங்க...வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை