தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை: கே. பாலகிருஷ்ணன் - மக்களவைத் தேர்தல்

கோவை: தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

krishnan

By

Published : Mar 26, 2019, 12:03 PM IST

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக - பாஜக வேட்பாளர்கள் தேர்தல் வரம்புகளை மீறி வருகின்றனர். இதனை கண்டிக்கும் நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிகள் மறுக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சின்னங்களை ஒதுக்குவதில்கூட தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை.

அதிமுக நிர்வாகிகள் சூரிய வெப்பத்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது அமைச்சருக்கு அழகில்லை. தமிழிசை சௌந்தரராஜன் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வு இல்லை என்று கூறுவது பொருத்தமற்றது” என்றார்.

Balakrishnan

ABOUT THE AUTHOR

...view details