கோவைவிமான நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி, ஏர் இந்தியா விமானம் மூலம் உகாண்டாவில் இருந்து வந்த சான்ட்ரா நண்டிஷா(33)(Santra Nanteza) போதைப் பொருளை மாத்திரை குப்பிகளில் அடைத்து அதனை விழுங்கி கடத்தி வந்துள்ளார்.
போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதான உகாண்டாவைச் சேர்ந்த பெண் இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு துறையினர், அவரை சோதனை செய்ததில் அவர் வயிற்றில் மாத்திரை குப்பிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த அலுவலர்கள் மருத்துவர்கள் மூலம் வயிற்றில் இருந்த 81 மாத்திரை குப்பிகளைப் பறிமுதல் செய்தனர்.
உகாண்டாவைச் சேர்ந்த பெண்ணை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு சோதனையில் அவை, மெத்தபெட்டமன் என்ற போதை மருந்து என தெரியவந்துள்ளது. சுமார் 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த 81 மருந்து குப்பிகள் எடுக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் இதனைத் தொடர்ந்து இன்று (மே 10) அவர் கோவை அத்தியாவசிய பண்டங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன் வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, அவரை 23ஆம் தேதி வரை சென்னையில் உள்ள புழல் சிறையில் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: இலங்கையில் கண்டதும் சுட உத்தரவு!