கோவை: ரூ. 56 லட்சம் செலவில் நலத்திட்டம்
கோவையில் 73ஆவது சுதந்திர தினம் இன்று வ.ஊ.சி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடியேற்றி தொடக்கி வைத்தார். பின்னர், காவல் துறையினர் அணிவகுப்பு நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் 129 பேருக்கு 4 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 251 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை காண ஏராளமான மக்கள் திரளாக வந்திருந்தனர்.
திருப்பூர்: ரூ. 56 லட்சம் செலவில் நலத்திட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், வருவாய் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் ரூ.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ - மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
உதகை: எளிமையாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.