தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் குடியரசு தின விழா; மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றினார்

கோவையில் 73வது குடியரசு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றினார். அத்துடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கோவையில்
கோவையில்

By

Published : Jan 27, 2022, 6:58 AM IST

கோவை: நாட்டின் 73வது குடியரசு தின விழா இன்று (ஜன.26ஆம் நாள்) கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை சிதம்பரனார் மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், சமாதான புறாக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பறக்கவிட்டனர்.

பாராட்டு சான்றிதழ்

அத்துடன், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர், மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் 303 பேருக்குப் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய கொடியை ஏற்றினார்

இந்நிகழ்வில், கரோனா தொற்று பரவலால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டன. அதேசமயம் குடியரசு தினவிழாவை முகநூலில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த குழுமத்தலைவர் ராமோஜி ராவ்!

ABOUT THE AUTHOR

...view details