கோவை மருதமலை சாலை வேளாண் கல்லூரி அருகே இரண்டு அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. கரோனோ தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், வேளாண் பல்கலைக்கழகம் அருகேயுள்ள மதுபானக் கடையின் பூட்டை உடைத்து 10 லட்ச ரூபாய் பணம், 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பானங்களை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருட்டு
இந்தக் கடையின் மேற்பார்வையாளர் வேலுச்சாமி சனிக்கிழமை (ஏப். 24) மது விற்பனை செய்த பணத்தை டாஸ்மாக் நிர்வாகம் பெற வராததால், அதனை கல்லாபெட்டியில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். நேற்று (ஏப். 25) முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலில், மதுபானக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
மதுபானக் கடையில் சிசிடிவி வசதி இல்லாத காரணத்தாலும், மேம்படுத்தபட்ட கல்லா பெட்டிகள் இல்லாததாலும் எளிதில் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.