கோவை மாவட்டத்தில் இன்று (ஆக.15) ஒரே நாளில் மட்டும் 290 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 569ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 175 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 223ஆக உயர்ந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 8,569ஆக உயர்வு!
கோவை: இன்று(ஆக.15) 290 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 569ஆக உயர்ந்துள்ளது.
Kovai