கோயமுத்தூர்: பாபர் மசூதி இடிப்பு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கோவையில் கடந்த ஒரு வார காலமாக காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு கண்டறியும் டிடெக்கர் கருவி
கடந்த ஒரு வாரமாக, கோவை மாநகரின் முக்கிய இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் மோப்ப நாய்களைக் கொண்டும் வெடிகுண்டு கண்டறியும் டிடெக்கர் கருவிகளைக் கொண்டும் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
பலத்த பாதுகாப்பு தீவிரம்
இந்நிலையில், டிசம்பர் 6ஆம் தேதியான இன்று கண்காணிப்புப் பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டது. மாநகரின் முக்கிய இடங்களான உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால், கோனியம்மன் கோயில் போன்ற பல இடங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:65ஆம் ஆண்டு நினைவு: அதிகார குரலற்றவர்களின் அறிவாயுதம் அண்ணல் அம்பேத்கர்