கோயம்புத்தூர்: ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் ராம்பிரசாத் - இலக்கியா தம்பதியினர். கடந்த ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு வரதட்சணையாக 100 சவரன் நகை, ஐந்து கிலோ வெள்ளி, சொகுசு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை ராம்பிரசாத் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், பணம் கேட்டு இலக்கியாவுடன் ராம்பிரசாத், அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக இலக்கியா அடிக்கடி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
தந்தை புகார்
இந்நிலையில், நேற்று முன்தினம் (அக். 9) இலக்கியா தற்கொலை செய்துகொண்டதாக ராம்பிரசாத், இலக்கியாவின் குடும்பத்தாருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, இலக்கியா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை அண்ணாதுரை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணமாகி ஒரே ஆண்டில் வரதட்சணை கொடுமை விவகாரத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தினால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே கேரளாவில் பாம்பை பயன்படுத்தி மனைவியைக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் கணவன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: கட்டைப்பையில் வைத்து குழந்தையை கடத்திய பெண் கைது