தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சரமாரி தாக்குதல் - G.H

கோவை: 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் கைதான சந்தோஷ்குமாரை இளைஞர்கள் சிலர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றவாளி சந்தோஷ்

By

Published : Apr 4, 2019, 7:02 PM IST

Updated : Apr 4, 2019, 9:05 PM IST

கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று மருத்துவ பரிசோதனைக்காக சந்தோஷ்குமார் மத்திய சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். காவல்துறையினரின் பாதுகாப்புடன் சந்தோஷ் குமார் அழைத்து வரப்பட்ட நிலையில், சுமார் அரை மணி நேரம் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடைபெற்றது.

கோவை சிறுமி வழக்கில் கைதானவர் மீது தாக்குதல்

இதன்பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது, அங்கிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் 6 வயது சிறுமியை கொலை செய்த குற்றவாளி சந்தோஷ் குமாரை விடக்கூடாது எனக் கூறி, சந்தோஷ் குமாரை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இளைஞர்களிடமிருந்து சந்தோஷ்குமாரை மீட்டு வாகனத்தில் ஏற்றி மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் 'எங்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, சந்தோஷ்குமாரை எங்கு பார்த்தாலும் தாக்குவோம், அதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதை எதிர் கொள்வோம்' எனத் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்தால் கோவை அரசு மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Last Updated : Apr 4, 2019, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details