தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் கோவையில் புத்தகத் திருவிழா! - book fair in kovai

கோவையில் வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது, அதன் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

கோவையில் புத்தக திருவிழா!
கோவையில் புத்தக திருவிழா!

By

Published : Jul 19, 2022, 9:40 PM IST

கோயம்புத்தூர்அவினாசி சாலை கொடிசியா வளாகத்தில் ஜூலை 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா அமைப்பு, தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து 6ஆவது புத்தகத் திருவிழா நடத்துகிறது.

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கு நுழைவு கட்டணம் கிடையாது; முற்றிலும் இலவசம் எனத் தெரிவிக்கப்படுள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. அந்நிகழ்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை கோயமுத்தூர் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் அளித்துள்ளார். அதன்படி,

வரும் 22.07.2022- வெள்ளிக்கிழமை

மாலை 5:30 மணி அளவில் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தொடங்கி வைக்கிறார். மூன்று இளம் படைப்பாளர்களுக்கான விருது 25,000 ரூபாயும் வாழ்த்து மடலும் வழங்கும் விழா.

மாவட்ட ஆட்சியர் பேட்டி

23.07.2022-சனிக்கிழமை:வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

24.07.2022- ஞாயிற்றுக்கிழமை:மாலை 4:30 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா. இந்த நூலை திரைப்பட இயக்குநர் ஞான.ராஜசேகரன் வெளியிடுகிறார். மாலை 6 மணி அளவில் கண்ணதாசன் பாடல்கள் சிறப்பு இசை நிகழ்ச்சி.

25.07.2022- திங்கட்கிழமை:சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் நவீன இலக்கிய உரை நிகழ்ச்சி.

26.07.2022- செவ்வாய்க்கிழமை:காலை 11 மணியளவில் "Big Bang"- Let Make Engineering Easy என்ற தலைப்பில் மாணவர்களுக்கான அறிவியல் அறிவோம் நிகழ்ச்சியும்; மாலை 6 மணி அளவில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் வழங்கும் "இசை இரவு" நிகழ்ச்சி.

27.07.2022- புதன்கிழமை:கோயம்புத்தூர் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா. சிறப்பு விருந்தினராக அப்துல் கலாமின் சீடர் தாமு பங்கேற்கிறார்.

28.07.2022- வியாக்கிழமை:காலை 11 மணியளவில் 5000 பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது, மாலை ஆறு மணி அளவில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி கலைஞர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி.

29.07.2022- வெள்ளிக்கிழமை:சாலமன் பாப்பையா மற்றும் குழுவினரின் சிறப்புப் பட்டிமன்றம்.

30.07.2022- சனிக்கிழமை:பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி.

31.07.2022- ஞாயிற்றுக்கிழமை:காலை 11 மணியளவில் மகளிர் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், மற்றும் கலைமாமணி விருது வென்ற மதுரை கோவிந்தராஜின் தமிழ்நாடு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி நாள்தோறும் பல்வேறு புத்தக வெளியீடுகள் நடைபெற உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் இலக்கிய நிகழ்வுகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், கதை சொல்லும் நிகழ்வுகள், சிறுகதைப்போட்டி, கவிதைப்போட்டி, விநாடி வினா ஆகியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

கண்காட்சியில் புத்தகம் வாங்குபவர்களுக்கு ஏராளமான சிறப்புத்திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகள் உள்ளதாகவும் கண்காட்சி வளாகத்தை அடையும் வகையில் அவிநாசி சாலையில் இருந்து இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:”நீட் மசோதா கலந்தாலோசனைக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது” உள்துறை அமைச்சகம் பதில்

ABOUT THE AUTHOR

...view details