தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை புத்தகக் கண்காட்சி: லட்சக்கணக்கான புத்தகங்களுடன் தொடங்கியது

கோயம்புத்தூர்: கொடிசியா சிறுதொழில்கள் சங்கம் சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி, கோவையில் நேற்று தொடங்கியது.

கோவை புத்தகக் கண்காட்சி

By

Published : Jul 20, 2019, 7:56 AM IST

கோவை கொடிசியா சிறுதொழில்கள் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும், "கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019" கொடிசியா வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இராசாமணி தொடக்கி வைத்தார்.

கொடிசியா வளாகத்தில் ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சி

ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் உள்ள 250 அரங்குகளில், 150 பதிப்பகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. முதல் நாளான நேற்று, ஏராளமான கல்லூரி மாணவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிந்தனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், இணையதளங்கள், கைப்பேசிகள் மூலம் படிப்பதைக் காட்டிலும், புத்தகம் படிப்பது ஒரு இனிமையான அனுபவத்தைத் தரும் எனவும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலிருந்து வரும் வாசம், அதில் கிடைக்கும் மகிழ்ச்சி இணையதளத்தில் கிடைக்காது எனவும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details