தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Omicron Variant Virus: கோவை விமான நிலையத்தில் ஒமைக்ரான் தொற்றுப் பரிசோதனை - இந்தியாவில் ஒமைக்ரான்

ஒமைக்ரான் தொற்று அதிவேகமாகப் பரவும் தன்மைகொண்டது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கோவை விமான நிலையம், coimbatore airport, Omicron Variant Virus test in coimbatore airport
Omicron Variant Virus

By

Published : Nov 29, 2021, 9:20 AM IST

கோயம்புத்தூர்: தென் ஆப்பிரிக்காவில் சில நாள்களுக்கு முன் ஒமைக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் பரவும் தன்மை வேகமாக உள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்நிலையில், கோயம்புத்தூர் விமான நிலையத்திலும் இந்தப் பரிசோதனையானது மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தப் புதிய வகை கரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவின் அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கோயம்புத்தூர் விமான நிலையத்திலும், முன்னெச்சரிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்த ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இப்பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவு வரும்வரை அவர்கள் எங்கும் செல்லக்கூடாது என்றும், அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதையும் படிங்க: Omicron Variant virus: கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details