கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 9ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகள் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.
கோயம்புத்தூர் மாவட்டத்திலும் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், மைதானம், குடிநீர் தொட்டிகள், குடிநீர்க் குழாய்கள் போன்றவை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களால் நடத்தப்பட்டுவருகின்றன.
பள்ளிகளில் முழுவீச்சில் தூய்மைப் பணிகள் 658 பள்ளிகள் திறப்பு
தனியார் பள்ளிகளில் அங்குள்ள பணியாளர்களால் தூய்மைப்படுத்தப்பட்டுவருகின்றன. நாளை (ஆகஸ்ட் 31) பள்ளிகள் அனைத்திலும் வகுப்பறைகள் கழிப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்கனவே தெரிவித்தபோது, "கோயம்புத்தூர் மாவட்டத்தில் 658 பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பையொட்டி பள்ளிகள் முழுவதும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள், இதரப் பணியாளர்கள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிவதை ஆசிரியர்கள் நாள்தோறும் உறுதிப்படுத்த வேண்டும்" என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 'பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதலமைச்சர் இன்று ஆலோசனை'