கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றார். இதனையடுத்து, காந்திபுரம் பேருந்து நிலையத்தை பார்வையிட்ட அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
கோவையில் கரோனா விழிப்புணர்வு மேற்கொண்ட முதலமைச்சர்! - முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
கோயம்புத்தூர்: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கரோனா பரவலை தடுப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
palanisamy
பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் கரோனா பரவலை தடுக்க முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த கடை வியாபாரிகளிடமும் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க:ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உயர் நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தும்!'