கோவை தடாகம் சாலை கணுவாய் பகுதியைச்சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். கோவையில் 1917-இல் பிறந்த இவருக்கு நேற்று(செப்.04) 106ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளை அவரது குடும்பத்தார் பேரன், பேத்திகள் இணைந்து விமரிசையாக கிடா வெட்டி, அப்பகுதி மக்களுக்கு விருந்தளித்து கொண்டாடினர்.
106ஆவது பிறந்தநாள் கண்ட கிருஷ்ணம்மாள் பாட்டி... கிடா விருந்தளித்த பேரன், பேத்திகள்! - மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்
கோவை கணுவாய் பகுதியில் 106 வயது மூதாட்டிக்கு பேரன், பேத்திகள் கிடாய் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிடா வெட்டி விருந்தளித்த பேரன் பேத்திகள்
மேலும் மூதாட்டிக்கு பொன்னாடை போர்த்தி, கிரீடம்வைத்து அழகுபடுத்தி வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 3 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இவரது காலில் விழுந்து வணங்கினர்.
இதையும் படிங்க:தமிழ் பெண்ணை கரம்பிடித்த வங்கதேச பெண்