தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆடியோவில் பேசியது நானா? பார் நாகராஜன் விளக்கம் - நாகராஜ் ஆடியோ

கோவை: பெண்ணை மிரட்டுவது போல் வெளியான ஆடியோவில் பேசியது தான் இல்லை என பொள்ளாச்சி விவகாரத்தில் சிக்கி பிணையில் வெளியே வந்திருக்கும் பார் நாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

பார் நாகராஜன்

By

Published : Apr 30, 2019, 10:41 AM IST

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் காவல் துறையில் சிக்கி பிணையில் வெளியே வந்திருக்கும் பார் நாகராஜன் ஒரு பெண்ணை மிரட்டுவது போன்ற ஆடியோ சமீபத்தில் வெளியானது.

அதில், “உயிர் மேல ஆச இருந்தா சம்பத் மேல் கொடுத்த கேஸ வாபஸ் வாங்கிட்டு ஓடிரு. இல்லைனா உன் புருஷன் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தாலும் சரி, சென்னை வந்தாலும் சரி அவனை தூக்குவேன். அப்புறம் உன் குடும்பத்தையும் தூக்குவேன்”என பேசியிருக்கிறார். சிபிஐ விசாரணையை தொடங்கியிருக்கும் சூழலில் இந்த ஆடியோ வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பார் நாகராஜன் மனு அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரிக்கும் நேரத்தில் தன்னைப் பற்றி இதுபோன்று ஆடியோ வெளியிட்டது திட்டமிட்ட நாடகம் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details