தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்களின் விலை உயரும் - வியாபாரிகள்

கோவையில் ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்களின் விலை மேலும் உயரும் எனப் பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 3, 2022, 3:37 PM IST

கோயம்புத்தூர்: கேரள மாநிலம் முழுவதும் வருகின்ற செப்.8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பாலக்காடு, மன்னார்காடு ஆகிய இடங்களுக்கு கோவையில் இருந்து அதிகப்படியான பூக்கள்(மல்லி, முல்லை, வண்ண பூக்கள்) ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை என முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக இருந்து வருவதால் பூக்களின் விலை உயர்ந்தவாறே உள்ளது. அடுத்த வாரம் ஓணம் பண்டிகை வரவுள்ளதை ஒட்டியும், முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வருவதனாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், 'மல்லி மற்றும் முல்லைப்பூக்களின் விலை வருகின்ற செப்.8ஆம் தேதி வரை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். முகூர்த்த நாட்கள் எல்லாம் சேர்ந்து வரும்போது இன்னும் விலை அதிகரிக்கும்

வண்ண பூக்களைப் பொறுத்தவரை ஓணம் பண்டிகையை ஒட்டி தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படும். அந்த வண்ண பூக்களின் விற்பனை ஆண்டிலேயே ஓணப்பண்டிகை வரும் அந்த வாரங்களில் மட்டுமே அதிகமாக இருக்கும்' எனத் தெரிவித்தனர்.

கோவையில் இருந்து செண்டு மல்லி அதிகம் வியாபாரம் செய்யப்படும் எனக்கூறிய அவர்கள், ரோஜா, அரளி ஆகியவை கிலோ சுமார் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுமெனத் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் பூச்சந்தை

மல்லி, முல்லை ஆகியவை கிலோ 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் எனவும்; ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். அதே சமயம் கேரளாவில் மழை இருந்தால் 10,20 ரூபாய் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.

இதையும் படிங்க: விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details